Blogger news

3/random/post-list

Tuesday, 7 March 2023

இலங்கையில் ஆசிரியர் வாண்மை விருத்திக்காக மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால மாற்றங்கள், சீர்திருத்ரங்கள்

இன்றைய நவீன யுகத்தில் உலகமயமாதல்,பொருளாதார விருத்தி, தொடர்பாடல் விருத்தி போன்றவற்றால் முழு உலகமும் ஒரு குடைக்குள்ளே கொண்டு வரப்பட்டுள்ளதால் மனிதன் தனது எண்ணங்களையும்,சிந்தனைகளையும், மாற்றியமைக்க வேண்டியுள்ளதுள்ளது அவ்வாறான மாற்றங்களுக்கேற்ப கல்வி முறை,கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளில் கல்வித் தொழில்நுட்பம், மதிப்பீட்டு முறைகள், தகமைகளுக்கான அங்கீகாரம்,வகுப்பறை முகாமைத்துவம், ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் கல்வி தொடர்பாக பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியதேவை காணப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் தமது பகிபங்குகளையும் தமது வாண்மையும் விருத்தியையும் விருத்தி செய்ய வேண்டிய அவசியம் தற்காலசூழ்நிலையில் உணரத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.அந்த வகையில் அண்மைக்காலமாக இலங்கையில் ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்யும் வகையில் மொழி அறிவு, விடய உள்ளடக்கம்,கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம், சமூக திறன்,பன்முக நோக்கம்,கணினி அறிவு,தொடர் கல்வி, ஊக்கம்,பன்மொழித் தேர்ச்சி, எப்பொழுதும் பணியாற்றும் மன்னப்பாங்கு,தகவல் தொழில்நுட்பத் தகமை,வகுப்பறை முகாமைத்துவம், ஆசிரியர் விழுமியங்கள்,செயல்திறன் மேன்பாட்டு நுட்ப முறைமைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன அதனடிப்படையில்...


இலங்கையில் ஆசிரியர் வான்மை விருத்தியை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கான அனைத்துப் பாடநெறிகளும் தற்போது ஒரு ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுவரப்பட்டு கற்றல், கற்பித்தல் செயல் முறையில் ஈடுபடும் ஆசிரியர் SLQF மட்டம்12 வரை செல்லக்கூடிய வகையில் அவை ஒழுங்குபடுத்தப்பட்டு ஆசிரியர்களுக்கான வினைதிறன் தடைதாண்டல் பரிட்சைகள் நடத்தப்படுகின்றன. மேலும் இவை  20மொடியூல்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன.

உதாரணமாக 

1வது வினை திறன் பரீட்சைக்கு 7 மொடியூல்கள்


2வது வினை திறன் பரீட்சைக்கு 7 மொடியூல்கள்


3வது வினை திறன் பரீட்சைக்கு 6 மொடியூல்கள் 

போன்றவற்றைக்குறிப்பிடலாம் இவ்வாறான ஒவ்வொரு மொடியூல்களும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது.


ஆசிரியர் வாண்மை விருத்தியை மேம்படுத்தும் வகையில் இலங்கை தேசிய கல்வி நிறுவகம் (NIE) ,கொழும்பு, பேராதனை,திறந்த ,யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிக் கல்வியுடன் தொடர்பான குறுங்கால,நீண்டகால கற்கை நெறிகளை வழங்கி வருகின்றமை.

உதாரணமாக

NIE நிறுவகத்தால்


1)Master Of Education 


2)Master Of Education Management 


3)Post Graduate Diploma Education (Tamil/Sinhala)


4)Post Graduate Diploma In School Counselling

போன்றவைகளை உதாரணமாக் குறிப்பிடலாம்.


அதே போல திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தில் B.A, E.L.T என்ற பாடநெறியும் , PGIE யிலும் சில கற்கைகளும் கற்பிக்கப்படுகின்றன. 




ஆசிரியர் பதவி உயர்வுகளை அடிப்படையாக வைத்து அண்மைக்காலமாக வாண்மை விருத்திச் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.


 ஆசிரியர் தொழிலை பெற்றவுடன் தொழிலொன்று கிடைத்துவிட்டு என்று இருந்து விடாமல் தமது தொழிற் தகமைகளை தொடர்ச்சியாக விருத்தி செய்து கொள்ளும் வகையில் ஆசிரியர் பதவி உயர்வுப் படிநிலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் காணப்படுகின்றன.

உதாரணமாக

 SLTSSLPSSLEASபோன்றவைகளைக் குறிப்பிடலாம். மேலும் பதவி உயர்வுகளை அடிப்படையாக வைத்து உள்நாட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் ஆகுவதற்கான வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றன இதன் முலம் பல்வேறு ஆசிரியர்கள் தங்களுடைய வாண்மையை மேம்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு பரீட்சைகள்,கருத்தரங்குகள், ஆசிரியர் வலையமைப்புக்கள், போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றமை.


வாண்மை விருத்தியை மேன்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான பாடம் பற்றிய பரந்த அறிவு, திறன் விருத்திச் செயற்பாடுகள்,ஆசிரியரியல் திறன்,மீளாக்கம் போன்றவற்றை ஆசிரியர்களுக்கு விருத்தி செய்து மாணவர்களுக்கு எவ்வாறான பாடங்களை கற்பித்தல்,எவ்வாறு கற்பித்தல்,கற்பித்தல் முறைகள் என்பன பற்றிய கருத்தரங்குள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை.


உதாரணமாக 

தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பரம்பரையை உருவாக்குவதற்காகICDL/AL/IPICT/க.பொ.த உயர் தரம், சாதாரண தரம் என்ற தொணிப் பொருளில் பயிற்சி வழங்கல்


அண்மையில் இலங்கை,ஜெர்மன் நாடுகளுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட இருபக்க உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் ஆசிரியர் வாண்மை நிகழ்ச்சி திட்டங்களை மேன்படுத்தும் வகையில் அந்நாடானது தனது ஆதரவுகளை தொடர்ந்து வழங்கி வருகிவருவதோடு ஆதாரக்கல்வி நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் ஆசிரியர்களுக்கு முன் சேவை பயிற்சி மற்றும் தொழிநுட்பப் பயிற்சி போன்றவற்றை வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.மேலும் 

இலங்கையினுடைய ஆசிரியர் சேவையினை மேன்படுத்திச் செல்லும் வகையில் சர்வதேச ஆசிரியர் ஒன்றியம்(WTO), ஐக்கிய நாடுகள் சபையின் (UNESCO )போன்ற சர்வதேச  நிறுவனங்களும் ஆசிரியர் சங்கங்கள், திட்டமிடல் பிரிவு(TEP) போன்ற உள்நாட்டு அமைப்புக்களினதும் ஒத்துழைப்புக்ள் போன்றன ஆசிரியர் வாண்மைத்துவத்திற்கு மென்மேலும் வலுவூட்டக்கூடியதாகவும் தொடர்ச்சியான பங்களிப்பினை தொடர்ந்தும் வழங்கக் கூடியதாகவும் காணப்படுகிறது.


இலங்கையினுடைய ஆசிரியர் வான்மைத்துவ மேன்பாட்டிற்காக கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு,தேசிய கல்வி நிறுவகம்,தேசிய கல்வியல் கல்லூரிகள்,ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள்,திறந்த பல்கலைக்கழகங்கள்,ஆசிரியர் நிலையங்கள் போன்றன பல்வேறு விதமான பங்களிப்புகளையும், காத்திரமான சேவைகளையும் ஆசிரியர் மேன்பாட்டிற்காக ஆற்றி வருகின்றன. எவ்வாறாயினும் இலங்கையுடைய கல்விப் புலத்தை நோக்கும் போது காலத்திற்குக் காலம் மாற்றமடைகின்ற அரசியல் கொள்கைகள்,பொருளாதார இஸ்திரமற்ற நிலை,அரசியல் ரீதியான நெருக்கடிகள்,முறைகேடான ஆசிரியர் நியமனங்கள்,கிராம நகர பாடசாலை பாடசாலைகளுக்கிடையிலான ஆசிரியர் நியமனங்களில் இடம் பெறக்கூடிய குளறுபடிகள்,ஆசிரியர்களுக்கான சம்பளம் சார் பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணிகள் ஆசிரியம் என்கின்ற சேவையைப் பாதிப்படையச் செய்யக்கூடியக் காரணிகளாக காணப்படுகின்றன. இவ்வாறான காரணிகள் ஆசிரியர் வான்மைத்துவத்தையும் பாதிப்படையச் செய்யக்கூடிய காரணிகளாகவே காணப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கு ஆசிரியர்களுக்கு கொடுக்கக்கூடிய உயர் மதிப்பு,கௌரவம்,சலுகைகள்,சம்பள முறைகள்,காலத்திற்கு உகந்த ஆசிரியர் மேன்பாட்டுத் திட்டங்கள் போன்றன அந்நாட்டின் ஆசிரியர் சேவையை உயர்ந்த மட்டத்தில் வைத்திருப்பதோடு  அந்நாடுகளின் கல்வி நிலையையும் உயர்ந்த மட்டத்தில் வைத்திருக்கவும் உதவுகின்றன. நம் நாடுகளை எடுத்துக் கொண்டால் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற அந்தஸ்து நிலை,சம்பள முறை,கௌரவம் போன்றன மேற்கத்திய நாடுகளை விட இழிநிலையிலே காணப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு பட்ட காரணிகள் இலங்கையினுடைய ஆசிரியர் வான்மைத்துவத்தையும் கல்வி புலத்தையும் பாதிப்படையச் செய்யக்கூடிய காரணிகளாக காணப்படுகின்றன. இவ்வாறான முரண்பாடுகள் தீர்க்கப்டும் வகையில் நிலைபேறான கல்விச் சீர்திருத்தங்களையும் அதனூடாக ஆசிரியர் மேன்பாட்டுத் திட்டங்களையும் காலத்திற்கு உகந்தாற் போல் கொண்டுவருவதன் முலம் நம்நாட்டிலும் கல்வி ரீதியாக மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க முடியும்.


Muhammadu Sahran

Eastern University of Sri Lanka 

1st year 2ed Semester 

2 comments: