சமூக விஞ்ஞானம்
"மனிதன் ஒரு சமூகப் பிராணியாவான் அவன் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எப்படியாவது சமூகத்தோடு இணைந்தே வாழ வேண்டும். தனிமைப்படுத்த மனிதன் ஒரு போதும் யதார்த்தமாக இருக்க முடியாது."(றோமன்ட்) இப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட மனிதன் இப் பெளதீக உலகில் தன்னுடைய செயற்பாடுகள் யாவற்றையும் இயற்கை சூழலோடும் அல்லது மனித குழுக்களுக்கிடையேயும் பேணியவனாகவே காணப்படுகிறான். இப்படிப்பட்ட மனிதனையும் அவனது செயற்பாடுகளையும் பற்றிக் கற்பதே சமூக விஞ்ஞானமாகும். அதாவது தனிமனித மற்றும் மனித குழுக்களின் நடத்தை பற்றி ஆய்வு செய்வதே ஆகும்.
சமூக விஞ்ஞானமனது மனித குலத்தின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடியதொன்றாகக் காணப்படுவதோடு கால சூழ்நிலைகளுக்கேற்ப மனித நடத்தைக் கோலங்களில் ஏற்படும் மாறுபாடுகளை அவதானம், வரலாற்று முறை, அகநோக்கு முறை ,கள ஆய்வு ,வினாக் கொத்து, பங்குபெற்றல் ,போட்டி முறை போன்ற நுட்ப முறைகளினூடாக ஆய்வு செய்யக் கூடியதொன்றாகக் காணப்படுகிறது.
குறிப்பாக சமூக விஞ்ஞானமானது அரசியல் விஞ்ஞானம் ,வரலாறு, பொருளியல் ,உளவியல், மானுடவியல் ,மனிதவள அபிவிருத்தி போன்ற பல்வேறுபட்ட துறைகளோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டதாகக் காணப்படுகிறது.
சமூக விஞ்ஞானமானது முழு சமூகத்தையும் முழுமையாக ஆய்வு செய்ய முயற்சிக்கும் பொது விஞ்ஞானமாகக் காணப்படுவதோடு ஒழுங்கமைக்கப்பட்ட ,ஒழுங்கமைக்கப்படாத சமுதாயக் கூறுகளை அலசி ஆராயக் கூடிய ஒரு துறையாகக் காணப்படுகிறது. அது தனி மனிதனில் தொடங்கி சர்வதேசம் வரைக்கும் மனிதனின் நடத்தைப் பங்குகளை தெள்ளத் தெளிவாக விளக்கக்கூடிய துறையாகவே காணப்படுகிறது.
உதாரணம்:-(அரச அறிவியல், புவியியல்)
Muhammadu Sahran
Eastern University of Sri Lanka
EU/IS/2020/AC/447
CS10147








👍
ReplyDeleteUseful post... keep it up
ReplyDelete👍
ReplyDeleteSuper
ReplyDeleteKeep it up
ReplyDeleteSuper
ReplyDelete👍
ReplyDeleteSuper 👍
ReplyDelete👏👏👏
ReplyDeleteகற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
ReplyDelete👌
DeleteSuper
ReplyDeleteSuper 👌 frnd 😍
ReplyDelete