Blogger news

3/random/post-list

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 20 March 2023

சமூக வகுப்பும் கல்வியும்

சமூக வகுப்பு என்பது

சமூக வகுப்பு என்பது பல்வேறுபட்ட மக்கள் குழுக்களுக்கு இடையே காணப்படுகின்ற கட்டமைப்பு சமத்துவமின்மை அல்லது சமூகத்தில் ஒரு விதமான அந்தஸ்து நிலையைக் கொண்ட பணியாளர்களின் தொகுதி என வரையறை செய்யலாம் 

சமூகவியல் வல்லுநர்களால் தொடச்சியாக ஆய்வு செய்யப்படுகின்ற ஒரு துறையாகவே இந்த சமூக வகுப்புக்கள்  காணப்படுகின்றது இது உண்மையில் சமூகத்தில் மக்கள் எவ்வாறு வரிசைப்படுத்தப்படுகின்றனர் என்பதை குறிக்கின்றது. வருமானம் மற்றும் செல்வம் அடிப்படையில் வகுப்புக்கள்

 1)மேல் வகுப்பு

2)குறைந்த வகுப்பு

3)நடுத்தர வகுப்பு

என்று வரிசைப்படுத்தப்படும். 

சமூக வர்க்க உள்நிலையானது ஒரு நபரின் கலாசார பின்னணியை வடிவமைக்கின்றது எனலாம். 

பொதுவாகப் பாடசாலைகள் கல்வி ரீதியாக வெவ்வேறு சமூக வகுப்புக்களின் அடையாளப்படுத்தும் காரணியாகக் காணப்படுவதோடு அத்தனை சமூக வகுப்புக்களையும் ஒன்று சேர்க்கும் மத்திய நிலையமாகவும் பாடசாலைகள் காணப்படுகிறது அந்த வகையில் பாடசாலைகள் சமூக வகுப்பினை வலுப்படுத்தும் காரணியாகவோ அல்லது அதனை இல்லாதொழிக்கும் காரணியாகவோ தொழிற்படுகிறது. அந்த வகையில்...

சமூக வகுப்புகள் எவ்வாறு கல்வி வாய்ப்புக்களைத் தீர்மானிக்கின்றன

கல்வி வாய்ப்புகளைத் தீர்மானிப்பதில் சமூக வகுப்புக்கள் எவ்வாறு தொழிற்படுகிறது


1) சமூகத்தில் ஒரு மனிதன் பெறக்கூடிய வருமானம் அவனுடைய கல்வி வாய்ப்புகளைத் தீர்மானிக்கின்றன

ஒரு மனிதனுடைய தனியாள் வருமானம் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்ற போது அவன் சமூகத்தில் உயர்ந்த நிலையில் மதிக்கப்படுவதோடு அவன் தன்னுடைய பொருளாதார பலத்தினால் தமக்குத் தேவையான கல்வி வாய்ப்புகளையும் இலகுவாகப் பெற்றுக் கொள்கிறான். ஆனால் கீழ்மட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மனிதனை எடுத்துக் கொண்டால் அவனிடம் வருமானக் குறைபாடு காரணமாக அவன் தான் விரும்பக்கூடிய கல்வி நடவடிக்கைகளைத் தொடர முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. உதாரணமாக

 இந்தியா போன்ற நாடுகளை எடுத்துக் கொள்வோமாக இருந்தால் அந்நாடுகளில் கல்வி வாய்ப்புகள் அதிகமாக காணப்பட்ட போதிலும் அங்கு கல்வியானது கட்டணம் செலுத்தியே பெற வேண்டிய ஒரு நிலை காணப்படுகிறது  இதனால் சாதாரண வகுப்பைச் சேர்ந்த மக்களும்,கீழ் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் தன்னுடைய கல்வி நடவடிக்கைகைகளை இடையிலே நிறுத்திக்கொள்ளும் நிலையை காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

அது போல நம் நாட்டில் சில பாடசாலைகளில் பிள்ளைகளை ஆட்சேர்ப்பு செய்கின்ற போது  பாடசாலைகள் பெற்றோர்களுடைய வருமானத்தை கவனத்தில் கொள்கின்றன பெற்றோர்களின் வருமானம் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்ற போது அவர்களின் பிள்ளைகளை தங்களுடைய பாடசாலைகளில் அனுமதிப்பதோடு பெற்றோர்களின் வருமானம் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போது அவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிப்பதற்கு மறுக்கின்றனர். அவ்வாறான பிள்ளைகள் பல்வேறு திறமைகளையும், ஆற்றல்களையும் கொண்டிருந்த போதிலும் அவர்களுடைய பெற்றோர்களின் வருமானத்தை காரணம் காட்டி தட்டிக் கழிக்கும் போக்கினை அவதானிக்க முடிகிறது. ஆகவே நம் நாட்டிலும் சமூகத்தில் காணப்படுகின்ற ஒரு தனியாளுடைய வருமானம் கல்வி வாய்ப்புகளை தீர்மானிக்க கூடிய ஒன்றாக காணப்படுகிறது.

2)சமயக்காரணிகள் சமூகத்தில் கல்வி வாய்ப்புகளை தீர்மானிக்கக் கூடிய காரணிகளாக் காணப்படுகின்றன

சமூக வகுப்புகளில் ஒன்றாகவே சமயங்கள் காணப்படுகின்றன குறிப்பாக சில சமயங்களில் காணப்படுகின்ற மூடநம்பிக்கைகள், தவறான சம்பிரதாய முறைமைகள் போன்றன ஒரு சமூகத்தினுடைய கல்வி வாய்ப்புகளை மட்டுப்படுத்துவதோடு சில சந்தர்ப்பங்களில் அவ்வாறான கல்வி வாய்ப்புகளைத் தொடரும் போது எதிர்க்கவும் செய்கின்றன.

உதாரணமாக சில சமயங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், வாழ்வியல் முறைமைகள் போன்றன தற்கால விஞ்ஞான கருத்துக்களோடு முரண்படக் கூடியதாக காணப்படுகின்ற படியால் அவ்வாறான கருத்துக்களின் உண்மை தன்மையை விஞ்ஞான ஆதாரங்களோடு முன்வைக்கும் போது இது எங்களுடைய சமயத்துக்கு முரணானது நாங்கள் இதனை அனுமதிக்க மாட்டோம், இதனை நடைமுறைப்படுத்தம் விடமாட்டோம் என சமயங்கள் எதிர்கின்றன. மேலும் கல்வித்திட்டங்களில் கூட சமய விவகாரங்களின் ஆதிக்கத்தினால் இவ்வாறான உண்மை தன்மையை முன்வைக்க முடியாத சூழ்நிலையும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனாலே கல்வி நடவடிக்கைகளின் போதும் சமயங்கள் தொடர்பான பொதுவான விடயங்களை மாத்திரமே முன்வைக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது.


3)சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெற்றோர்களினதும் கல்விநிலை பிள்ளைகளின் கல்வி வாய்ப்பினை  தீர்மானிக்கின்றன ஆகவே தான் பெற்றோரின் கல்வி அந்தஸ்து ஒரு சமூக வகுப்பை தீர்மானிக்கும் காரணிகளாக காணப்படுகிறது 

உதாரணமாக பெற்றோர்கள் கல்விகற்றவர்களாகவும் ,அறிவு தேர்ச்சி உடையவர்களாகவும் காணப்படுமிடத்து  அவர்கள் கல்விக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் அவர்களுடைய குடும்பத்தில் காணப்படுகின்ற கல்விச்சூழல் என்பன அந்தப் பிள்ளையின் உடைய கல்விக்கான வாய்ப்பினை அதிகரிக்க செய்கின்றன மேலும் கல்வி ரீதியாக அவர்களுக்கு உரிய கௌரவமும் சமூகத்தில் வழங்கப்படுகின்றன இதனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் கல்வியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு ஆர்வத்தைக் காட்டுகின்றன. ஆனால்  கல்விக்கான சூழல் குறைவாக காணப்படுகின்ற குடும்பத்தில் பெற்றோர்களின் கல்விநிலையும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் அச் சூழலில் வளரும் பிள்ளைகள் தன்னை கல்வியில் ஈடுபடுத்திக் கொள்வதற்கு குறைந்த நிலையிலே

ஈடுபாடு காட்டுகின்றனர். பெரும்பாலான சமூக அமைப்பை எடுத்து நோக்கும்போது பெற்றோர்களின் கல்வி அந்தஸ்தினை அடிப்படையாகக் கொண்டு சில பாடசாலைகள் பிள்ளைகளின் கல்வி வாய்ப்புகளைத் தீர்மானிக்கின்றன


அதாவது அதாவது பெற்றோர்கள் அங்கு கல்வி கற்றவராக காணப்படுகின்ற போது அவர்களே அவர்களுடைய பிள்ளைகளை தேசிய பாடசாலைகளில் அனுமதிக்கப்படும் தன்மை உயர்வாகும் பெற்றோர்களின் கல்வி மட்டும் குறைந்த நிலையில் காணப்படுகின்ற போது அவர்களை அவ்வாறான பாடசாலைகளில் உள்வாங்கப்படாமல் காணப்படும் போக்கினை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக 

கொழும்பு ரோராயல் கல்லூரி, கொழும்பு ஆனந்தா கல்லூரி மட்டக்களப்பில் உள்ள சிசிலியா, வின்சன் போன்ற மகளிர் கல்லூரி போன்றவைகளை குறிப்பிடலாம்.


4) சமூகத்தில் காணப்படுகின்ற பால் ரீதியான வேறுபாடுகள் ஒரு மனிதனுடைய கல்வி நடவடிக்கைகளைத் தீர்மானிக்கின்றன

கல்வியானது எல்லா மக்களுக்கும் பொதுவானது என்ற கருத்து காணப்பட்ட போதிலும் பால் ரீதியாக பெண்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் ஆண்டண்டு காலமாக மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருவதை இன்றளவிலும் நம்  அவதானிக்க முடிகிறது.


நம் சமூகத்தில் காணப்படுகின்ற பெண்கள் பற்றிய இழிவான கண்ணோட்டம் அவர்கள் கல்வி வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான தன்மையை தடுக்க கூடியவைகளாக காணப்படுகின்றன இன்றளவிலும் பெண்கள் குடும்பத்தை சுமப்பவளாகவும், பிள்ளைகளையும் வளர்ப்பவளாகவும் நோக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது இவ்வாறான பல்வேறு பட்ட காரணிகள் சமூக ரீதியாக பெண்களின் கல்வி வாய்ப்புகளை தடுக்க கூடியவைகளாக காணப்படுகின்றன.


5)சமூகத்தில் காணப்படுகின்றன சாதிப்பாகுபாடுகள் மனிதனுடைய கல்வி நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றமை 

கல்வியில் சாதிப்பாகுபாடு என்பது கல்விக்கான உரிமையை ஒரு குறிப்பிட்ட குழுவை /சாதியை சேர்ந்தவர்களுக்கு பாகுபாடு காட்டுவதேயாகும் 

கல்வியில் பாகுபாடு இனவியம்,தேசியவினம்,வயது, பாலினம், பொருளாதார நிலை,மதம் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கலாம். 

அந்த வகையில் சாதிப்பாகுபாட்டில் உயர்சாதி,கீழ் சாதி என இரண்டு சாதிகள் காணப்படுகின்றமையினால் பெரும்பாலான மக்கள் உயர்சாதியில் உள்ளவர்களுடன் மட்டும் தான் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள்.கீழ் சாதியில் உள்ளவர்கள் நன்றாக படிப்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களுடன் சேர்ந்து கல்வி கற்பதற்கு அவர்கள் விரும்புவதில்லை. இதனால் கீழ் சாதியில் உள்ளவர்களின் கல்வி பின் தங்கிய நிலையில் செல்வதற்கு இந்த சாதிப்பாகுபாடு  மிக இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது.

பல பகுதிகளில் இனம்/சாதிப்பாகுபாட்டின் அடிப்படையில் கல்வி உட்பட அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுகின்ற வரலாறை கொண்டுள்ளது. ஆனால் தற்போது எல்லா இடங்களிலும் இத்தகைய பாகுபாடு தடுக்கும் எதிர்ப்புச் சட்டங்கள் உள்ளன.


6)மொழி ரீதியான காரணிகள் சமூகத்தின் கல்வி வாய்ப்பை தீர்மானிக்கின்றன.

ஒவ்வொரு சமூக வகுப்பும் ஒரு மொழியை பிரதானமாக க்கொண்டுடே கல்வியை போதிக்கின்றன. உதாரணமாக இலங்கையினுடைய பெரும்பான்மை சமூக மக்கள் வாழுகின்ற பகுதிகளில் அனேகமாக சிங்கள மொழி மூலமாகவே கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன அவ்வாறு கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் போது அங்கு ஒரு தமிழ் பேசும் ஒரு மாணவனால் அவன் தன்னுடைய தமிழ் மொழியில் அங்கு  கல்வி கற்க முடியாது மாறாக சிங்கள மொழியிலேயே கல்வி கற்க வேண்டிய ஒரு நிலை காணப்படுகிறது. இதனால் அவன் தன்னுடைய சொந்த மொழியில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை அந்த சமூகம் கட்டுப்படுத்துகிறது

7)சமூக மட்டத்தில் இடம்பெறக்கூடிய பிரதேச ரீதியான அபிவிருத்திகளும் சமூக வகுப்புகளை தீர்மானிக்கும் காரணிகளாக காணப்படுகிறது இது பின்வரும் முறைகளில் கல்வி நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றன 

உதாரணமாக கிராம, நகர அடிப்படையில் நோக்கும்போது 

கிராம புறங்களிலும்  நகர புறங்களிலும் கல்வி நடவடிக்கைகளில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. 

குறிப்பாக நகரப் பிரதேசங்கள் அனைத்தும் பல துறைகளாளும் அபிவிருத்தியடைந்த பகுதியாக் காணப்படுகின்ற படியால் அங்கே கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் உயர்வாக காணப்படுகின்றன. மேலதிகமான ஆசிரியர்கள், மேலதிகமான பாடசாலை வளங்கள், சொகுசான உட்கட்டமைப்பு வசதிகள், இணை பாடவிதான செயற்பாடுகளில் அதீத ஆர்வம் கணினி வசதிகள் இணையதள வசதிகள் மற்றும் பல்வேறுபட்ட வசதிகளைக் கொண்டதாக  பாடசாலைகள் அமைந்து காணப்படுகின்றபடியால் அங்கு கல்விக்ற்கான வாய்ப்புகள் உயர்வாக காணப்படுகின்றன ஆனால் கிராம மட்டத்தினை எடுத்து நோக்குகின்ற போது அங்கு பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் ,இணை பாடவிதான செயற்பாடுகளுக்கான வாய்ப்புகள், கணினி மயப்படுத்தப்பட்ட வகுப்புகள், இணைய வசதிகள் போன்ற பல்வேறு வட்ட வசதிகள் அங்கு மட்டுப்படுத்தப்படுகின்றபடியால் போன்றன அங்கு கல்வி நடவடிக்கைகள் மட்டுப்படுத்துகின்றன. இதனால் பாடசாலைகளில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களின் திறன்களும் இவ்வாறான பல்வேறு காரணிகளால் மட்டுப்படுத்தப்படுவதனை அவதானிக்க முடிகிறது ஆகவே பிரதேச ரீதியான அபிவிருத்தி திட்டங்களும் ஒரு சமூக வகுப்புகளை தீர்மானிக்க கூடிய காரணியாக காணப்படுவதோடு கல்வி வாய்ப்புகளை தீர்மானிக்கும் காரணியாகவும்  காணப்படுகிறது.

இறுதியாக

ஆரம்பம் முதல் இன்று வரை சமூக வகுப்புகளற்ற சமூகம் ஒன்றை காண முடியாதுள்ளது என்பதை நிதர்சனம். அந்த  வகையில் சமூகத்தின் அபிவிருத்திக்கு கல்வியும், கல்வியின் அபிவிருத்திக்கு சமூகமும் பொறுப்பானவையாகும். சமூக வகுப்புகளுக்கு இடையே நிலவும் இடைவெளிகளை குறைப்பதற்கு கல்வி ஒரு ஊன்றுகோலாக அமைவது குறிப்பிடத்தக்கதாகும்.

 பெற்றோரின் கல்விநிலை பொருளாதார கல்வி வாய்ப்புகளை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துவதுடன் சமய காரணிகள், சாதிப்பாகுபாடுகள், சமூகத்தில் நிலவும் பால் ரீதியான வேறுபாடுகள் என்பன கல்வி வாய்ப்புகளை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன.  பின்தங்கிய சமூக வகுப்பினருக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படுமேயானால் அவர்களின் ஆற்றல்களும் விருத்தி அடைந்து சிறந்த பிரஜைகளாக உருவாகுவார்.

 சிறந்த சமூகப் பின்னணி உள்ளவருக்கு கல்வி வாய்ப்புகள் கூடுதலாக காணப்படுகின்றன. இலங்கையின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாடசாலைகளில் வழங்கப்படும் கல்விக்கும் இடையே தராதர வேறுபாடு காணப்படுவதில் சமூக வகுப்பு செல்வாக்கு செலுத்துகின்றது.  நகர்ப்புற மாணவர்களுடன் ஒப்பிடுகையில் கிராமப்புற மாணவருக்கு வழங்கப்படும் கல்வியின் தராதரம் குறைவாகவே காணப்படுகின்றது.

இவ்வாறாக கல்வி வாய்ப்புகளை தீர்மானிப்பதில் சமூக வகுப்பானது செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை எம்மால் விளங்கி கொள்ள முடிகிறது.

கல்வியில் சமூக வகுப்பின் சாதகம்

1)சமூக வகுப்புகள் ஒருமனிதனுடைய  கலாச்சார, பண்பாட்டு, ஒழுக்க விழுமியங்களை பாதுகாக்க உதவுகின்றன இது கல்வியில் ஒரு மனிதனுடைய கலாச்சார ஒழுக்க விழுமியங்களை பேணிப் பாதுகாக்க உதவுகின்றன உதாரணமாக-

 மதம், மொழி,சம்பிரதாயம்,ஆடை அலங்கார முறைகள்

2)சமூக வகுப்புகள் தத்தமது வகுப்புக்குள்ளேயே தமது செயற்பாடுகளை பெரும்பாலும் வரையறுத்துக் கொள்வதனால் சமூக உறுப்பினர்களிடையே ஒற்றுமை, உறவுப் பாலம் ஆகியன வலுவாகக் காணப்படும். இது கலாசார ஒற்றுமை, கருத்துப் பரிமாற்றம் என்பவற்றை மேம்படுத்துகின்றது. 

3)சமூக வகுப்புகள் ஒரு மனிதனின் உள்ளத்தில் "முன்னேற வேண்டும்", "சாதிக்க வேண்டும்" என்ற உணர்வினை எழச் செய்கிறது. உதாரணமாக- தாழ்த்தப்பட்ட சமூகத்தில் காணப்படுகின்ற ஒரு மனிதன் தானும் முன்னேறி உயர்நிலையை அடைய வேண்டும் என்ற உணர்வினை தூண்டுவதற்கு உந்து சக்தியாக அமைகிறது

5)சமூக வகுப்புகள் பல்வேறு கொள்கைகள்,கோட்பாடுகள் தோற்றம் பெறுவதற்குக் காரணமாக அமைகிறது. 

 உதாரணமாக- தாராண்மை வாதக் கொள்கை, சமஉடைமை வாதக் கொள்கை 


சமூக வகுப்புக்களினால் கல்வி வாய்ப்புகளுக்கு ஏற்படும் பாதகங்கள்


1)சமூகவகுப்புக்கள் மக்களிடையே பாகுபாட்டு உணர்வை ஏற்படுத்துவதனால் அவை கல்வியிலும் தாக்கம் செலுத்துகின்றன.

2)கல்வி என்பது அனைவருக்கும் பொதுவாக கிடைக்க வேண்டிய ஒன்றாகும்.அதனுள்ளே வகுப்பு வேறுபாடுகள் தோற்றம் பெறும் போது மாணவர்கள் மத்தியில் வன்முறை,விரோதம், கல்வியின் மீது  ஆர்வமின்மை போன்றன ஏற்படக் காரணமாகின்றன.

3)சமூகவகுப்புக்கள் கல்விசார் நிறுவனங்களை வளரீதியாகப் பாகுபாட்டிற்கு உட்படுத்துவதோடு தத்தம் வசதிகளுக்கு ஏற்ற வகையில் கல்வி வழங்குவதை வரையறை செய்கின்றன.

(உ+ம்):கிராம நகர பாடசாலைகளின் வளரீதியான வேறுபாடும் அங்கு இடம்பெறும் கற்றல்,கற்பித்தல் சார் வேறுபாடுகளும்.

4)சாதாரண மக்கள்,கீழ்மட்ட மக்கள் கல்வி வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கும் சமூகவகுப்புகள் தடையாக அமைகின்றன.

4)சமூகவகுப்புக்களின் ஆதிக்கம் கல்வியில் மேலோங்கும் போது அது நாட்டினதும், சமூகத்தினதும் அபிவிருத்திக்குத் தடையாக அமைவதோடு இனவாதம்,வன்முறை ,போராட்டம் போன்ற அழிவு தரும் நிலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடிய காரணியாக அமையும்.


S.M Sahran

Eastern University of sri Lanka 

1st year 2ed Semester 

2020/2021

Thursday, 16 March 2023

படங்களை சிறுப்பித்தல்

 படங்களை சிறுப்பித்தல்


1)வழங்கப்பட்டுள்ள 1:50,000 எனும் அளவுத்திட்டத்தில் அமைந்த இறக்குவானை இட விளக்கப்படத்தின் தென்கிழக்கு மூலையில் 10×10CM பரப்பினை தெரிவு செய்து அதன் பகுதி அம்சங்களை 1:100000 எனும் அளவு திட்டத்தில் வரைந்து காட்டுக.


2)நேர்கோட்டு அளவு திட்டத்தையும் தருக.

இறக்குவானை பட இலக்கம் 81





1:50000அளவுத்திட்டத்தை 1:100000எனும் அளவுத்திட்டத்தில் வரைந்த படம்


1:50000 படத்தின் தென்கிழக்கு மூலைப்பகுதி 10×10CM களாகும் அதனை 1:100000எனும் அளவுத்திட்டத்தில் வரையும் போது அது அதனுடைய அரை மடங்காக சிறுப்பித்துக் காட்டப்படும்.அப்போது அது 5×5CM களாகக் 
காட்டப்படும்.

Monday, 13 March 2023

காலத்தொடர் பகுப்பாய்வு

நம்மில் உள்ள பலருக்கு Statistic கற்கை கடினமாக இருக்கலாம் அவர்களின் தேவை கருதி காலத்தொடர் பகுப்பாய்வு தொடர்பான மாதிரி வினாவும் அதற்கான விடையும் செய்முறையோடு இதில் பதிவிட்டுள்ளேன் 

இது உங்களுக்கு போதுமாய் இருக்கும் என்று நான் நினைகிறேன்

1 Question 



Question No -02






நகரும் சராசரி 2003இல் இருந்து ஆரம்பமா
கும்


Sunday, 12 March 2023

இடவிளக்கப்படம் வரைதல்

 1:50000 அளவுத்திட்டத்தில் இறக்குவாணை பிரதேசத்தில் உள்ள பெளதிக அம்சங்களை 1:25000அளவுத்திட்டத்தில் பெருப்பித்து வரைதல்


இறக்குவானையின் மாதிரிப் படம் 1:50000




1:50000படத்தை 1:25000 அளவுத்திட்டத்திற்கு மாற்றுதல்

Step -01




முதலில் Oil paperஇல் 1:5000 அளவுத்திட்டத்தின் எல்லைக் கோட்டினை வரைந்து ஒரு செவ்வகப் பகுதியொ ன்றினைப் பெற்றுக் கொள்ளல்

பிறகு அதன் மேல் Oil பேப்பரை வைத்து அதில் உள்ள பகுதி பெளதீகஅம்சங்களை குறித்துக்கொள்ளல் பண்பாட்டு அம்சங்களை வரையக் கோருமிடத்து அதனையும் வரைந்து அவ்வாறே வரைந்து கொள்ளல் 

இட விளக்கப்படத்தில் சமவுயரக் கோடுகள் அதிகமாகக் காணப்படுகின்ற போது அதில் காணப்படுகின்ற பிரதான சமவுயரக் கோ டுகளை மாத்திரம் வரைந்து கொள்ளல் போ துமானது

விளக்கப்படத்தில் காணப்படுகின்ற பிரதான அம்சங்களை வரைந்தபின்னர் அதனை நீள,அகலம் 2cm×2cm வரும் படி சிறிய சதுரங்களாகளாகப் பிரித்தல் பின்னர் அதிலுள்ள அம்சத்தினை 1:25000 அளவுத்திட்டத்தில் வரைதல்

எவ்வாறு 1:25000 அளவுத்திட்டத்தில் வரைவது

1: 50000 அளவுத் திட்டத்தினை 1:25000 எனும் அளவு திட்டத்தில் வரையும் போது அப் படத்தின் 2மடங்காக அது பெருப்பித்துக் காட்டப்படும் மேலும் மேலே தரப்பட்டுள்ள படி 2×2நீள,அகலங்களை கொண்ட சிறிய சிறிய சதுர பெட்டிகள் 1:25000 அளவுத்திட்டத்தில் இரண்டு மடங்காக காட்டப்படும் அப்போது அது நீள, அகலம்4×4 ஆக அமையும் பின்னர் அதில் உள்ள பெளதீக அம்சங்களையும், வேவையாயின் பண்பாட்டு அம்சங்களையும் தேவையாயின் வரைந்து கொள்ளலாம்.

Muhammadu Sahran
Eastern University of sri Lanka 

Tuesday, 7 March 2023

இலங்கையில் ஆசிரியர் வாண்மை விருத்திக்காக மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால மாற்றங்கள், சீர்திருத்ரங்கள்

இன்றைய நவீன யுகத்தில் உலகமயமாதல்,பொருளாதார விருத்தி, தொடர்பாடல் விருத்தி போன்றவற்றால் முழு உலகமும் ஒரு குடைக்குள்ளே கொண்டு வரப்பட்டுள்ளதால் மனிதன் தனது எண்ணங்களையும்,சிந்தனைகளையும், மாற்றியமைக்க வேண்டியுள்ளதுள்ளது அவ்வாறான மாற்றங்களுக்கேற்ப கல்வி முறை,கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளில் கல்வித் தொழில்நுட்பம், மதிப்பீட்டு முறைகள், தகமைகளுக்கான அங்கீகாரம்,வகுப்பறை முகாமைத்துவம், ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் கல்வி தொடர்பாக பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியதேவை காணப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் தமது பகிபங்குகளையும் தமது வாண்மையும் விருத்தியையும் விருத்தி செய்ய வேண்டிய அவசியம் தற்காலசூழ்நிலையில் உணரத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.அந்த வகையில் அண்மைக்காலமாக இலங்கையில் ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்யும் வகையில் மொழி அறிவு, விடய உள்ளடக்கம்,கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம், சமூக திறன்,பன்முக நோக்கம்,கணினி அறிவு,தொடர் கல்வி, ஊக்கம்,பன்மொழித் தேர்ச்சி, எப்பொழுதும் பணியாற்றும் மன்னப்பாங்கு,தகவல் தொழில்நுட்பத் தகமை,வகுப்பறை முகாமைத்துவம், ஆசிரியர் விழுமியங்கள்,செயல்திறன் மேன்பாட்டு நுட்ப முறைமைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன அதனடிப்படையில்...


இலங்கையில் ஆசிரியர் வான்மை விருத்தியை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கான அனைத்துப் பாடநெறிகளும் தற்போது ஒரு ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுவரப்பட்டு கற்றல், கற்பித்தல் செயல் முறையில் ஈடுபடும் ஆசிரியர் SLQF மட்டம்12 வரை செல்லக்கூடிய வகையில் அவை ஒழுங்குபடுத்தப்பட்டு ஆசிரியர்களுக்கான வினைதிறன் தடைதாண்டல் பரிட்சைகள் நடத்தப்படுகின்றன. மேலும் இவை  20மொடியூல்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன.

உதாரணமாக 

1வது வினை திறன் பரீட்சைக்கு 7 மொடியூல்கள்


2வது வினை திறன் பரீட்சைக்கு 7 மொடியூல்கள்


3வது வினை திறன் பரீட்சைக்கு 6 மொடியூல்கள் 

போன்றவற்றைக்குறிப்பிடலாம் இவ்வாறான ஒவ்வொரு மொடியூல்களும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது.


ஆசிரியர் வாண்மை விருத்தியை மேம்படுத்தும் வகையில் இலங்கை தேசிய கல்வி நிறுவகம் (NIE) ,கொழும்பு, பேராதனை,திறந்த ,யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிக் கல்வியுடன் தொடர்பான குறுங்கால,நீண்டகால கற்கை நெறிகளை வழங்கி வருகின்றமை.

உதாரணமாக

NIE நிறுவகத்தால்


1)Master Of Education 


2)Master Of Education Management 


3)Post Graduate Diploma Education (Tamil/Sinhala)


4)Post Graduate Diploma In School Counselling

போன்றவைகளை உதாரணமாக் குறிப்பிடலாம்.


அதே போல திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தில் B.A, E.L.T என்ற பாடநெறியும் , PGIE யிலும் சில கற்கைகளும் கற்பிக்கப்படுகின்றன. 




ஆசிரியர் பதவி உயர்வுகளை அடிப்படையாக வைத்து அண்மைக்காலமாக வாண்மை விருத்திச் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.


 ஆசிரியர் தொழிலை பெற்றவுடன் தொழிலொன்று கிடைத்துவிட்டு என்று இருந்து விடாமல் தமது தொழிற் தகமைகளை தொடர்ச்சியாக விருத்தி செய்து கொள்ளும் வகையில் ஆசிரியர் பதவி உயர்வுப் படிநிலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் காணப்படுகின்றன.

உதாரணமாக

 SLTSSLPSSLEASபோன்றவைகளைக் குறிப்பிடலாம். மேலும் பதவி உயர்வுகளை அடிப்படையாக வைத்து உள்நாட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் ஆகுவதற்கான வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றன இதன் முலம் பல்வேறு ஆசிரியர்கள் தங்களுடைய வாண்மையை மேம்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு பரீட்சைகள்,கருத்தரங்குகள், ஆசிரியர் வலையமைப்புக்கள், போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றமை.


வாண்மை விருத்தியை மேன்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான பாடம் பற்றிய பரந்த அறிவு, திறன் விருத்திச் செயற்பாடுகள்,ஆசிரியரியல் திறன்,மீளாக்கம் போன்றவற்றை ஆசிரியர்களுக்கு விருத்தி செய்து மாணவர்களுக்கு எவ்வாறான பாடங்களை கற்பித்தல்,எவ்வாறு கற்பித்தல்,கற்பித்தல் முறைகள் என்பன பற்றிய கருத்தரங்குள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை.


உதாரணமாக 

தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பரம்பரையை உருவாக்குவதற்காகICDL/AL/IPICT/க.பொ.த உயர் தரம், சாதாரண தரம் என்ற தொணிப் பொருளில் பயிற்சி வழங்கல்


அண்மையில் இலங்கை,ஜெர்மன் நாடுகளுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட இருபக்க உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் ஆசிரியர் வாண்மை நிகழ்ச்சி திட்டங்களை மேன்படுத்தும் வகையில் அந்நாடானது தனது ஆதரவுகளை தொடர்ந்து வழங்கி வருகிவருவதோடு ஆதாரக்கல்வி நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் ஆசிரியர்களுக்கு முன் சேவை பயிற்சி மற்றும் தொழிநுட்பப் பயிற்சி போன்றவற்றை வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.மேலும் 

இலங்கையினுடைய ஆசிரியர் சேவையினை மேன்படுத்திச் செல்லும் வகையில் சர்வதேச ஆசிரியர் ஒன்றியம்(WTO), ஐக்கிய நாடுகள் சபையின் (UNESCO )போன்ற சர்வதேச  நிறுவனங்களும் ஆசிரியர் சங்கங்கள், திட்டமிடல் பிரிவு(TEP) போன்ற உள்நாட்டு அமைப்புக்களினதும் ஒத்துழைப்புக்ள் போன்றன ஆசிரியர் வாண்மைத்துவத்திற்கு மென்மேலும் வலுவூட்டக்கூடியதாகவும் தொடர்ச்சியான பங்களிப்பினை தொடர்ந்தும் வழங்கக் கூடியதாகவும் காணப்படுகிறது.


இலங்கையினுடைய ஆசிரியர் வான்மைத்துவ மேன்பாட்டிற்காக கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு,தேசிய கல்வி நிறுவகம்,தேசிய கல்வியல் கல்லூரிகள்,ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள்,திறந்த பல்கலைக்கழகங்கள்,ஆசிரியர் நிலையங்கள் போன்றன பல்வேறு விதமான பங்களிப்புகளையும், காத்திரமான சேவைகளையும் ஆசிரியர் மேன்பாட்டிற்காக ஆற்றி வருகின்றன. எவ்வாறாயினும் இலங்கையுடைய கல்விப் புலத்தை நோக்கும் போது காலத்திற்குக் காலம் மாற்றமடைகின்ற அரசியல் கொள்கைகள்,பொருளாதார இஸ்திரமற்ற நிலை,அரசியல் ரீதியான நெருக்கடிகள்,முறைகேடான ஆசிரியர் நியமனங்கள்,கிராம நகர பாடசாலை பாடசாலைகளுக்கிடையிலான ஆசிரியர் நியமனங்களில் இடம் பெறக்கூடிய குளறுபடிகள்,ஆசிரியர்களுக்கான சம்பளம் சார் பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணிகள் ஆசிரியம் என்கின்ற சேவையைப் பாதிப்படையச் செய்யக்கூடியக் காரணிகளாக காணப்படுகின்றன. இவ்வாறான காரணிகள் ஆசிரியர் வான்மைத்துவத்தையும் பாதிப்படையச் செய்யக்கூடிய காரணிகளாகவே காணப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கு ஆசிரியர்களுக்கு கொடுக்கக்கூடிய உயர் மதிப்பு,கௌரவம்,சலுகைகள்,சம்பள முறைகள்,காலத்திற்கு உகந்த ஆசிரியர் மேன்பாட்டுத் திட்டங்கள் போன்றன அந்நாட்டின் ஆசிரியர் சேவையை உயர்ந்த மட்டத்தில் வைத்திருப்பதோடு  அந்நாடுகளின் கல்வி நிலையையும் உயர்ந்த மட்டத்தில் வைத்திருக்கவும் உதவுகின்றன. நம் நாடுகளை எடுத்துக் கொண்டால் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற அந்தஸ்து நிலை,சம்பள முறை,கௌரவம் போன்றன மேற்கத்திய நாடுகளை விட இழிநிலையிலே காணப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு பட்ட காரணிகள் இலங்கையினுடைய ஆசிரியர் வான்மைத்துவத்தையும் கல்வி புலத்தையும் பாதிப்படையச் செய்யக்கூடிய காரணிகளாக காணப்படுகின்றன. இவ்வாறான முரண்பாடுகள் தீர்க்கப்டும் வகையில் நிலைபேறான கல்விச் சீர்திருத்தங்களையும் அதனூடாக ஆசிரியர் மேன்பாட்டுத் திட்டங்களையும் காலத்திற்கு உகந்தாற் போல் கொண்டுவருவதன் முலம் நம்நாட்டிலும் கல்வி ரீதியாக மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க முடியும்.


Muhammadu Sahran

Eastern University of Sri Lanka 

1st year 2ed Semester 

Thursday, 2 March 2023

சமூக விஞ்ஞானம்

 சமூக விஞ்ஞானம்


"மனிதன் ஒரு சமூகப் பிராணியாவான் அவன் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள  எப்படியாவது சமூகத்தோடு இணைந்தே வாழ வேண்டும். தனிமைப்படுத்த மனிதன் ஒரு போதும் யதார்த்தமாக இருக்க முடியாது."(றோமன்ட்) இப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட மனிதன் இப் பெளதீக உலகில் தன்னுடைய செயற்பாடுகள் யாவற்றையும் இயற்கை சூழலோடும் அல்லது மனித குழுக்களுக்கிடையேயும்  பேணியவனாகவே காணப்படுகிறான். இப்படிப்பட்ட மனிதனையும் அவனது செயற்பாடுகளையும் பற்றிக் கற்பதே சமூக விஞ்ஞானமாகும். அதாவது தனிமனித மற்றும் மனித குழுக்களின் நடத்தை பற்றி ஆய்வு செய்வதே ஆகும்.


சமூக விஞ்ஞானமனது மனித குலத்தின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடியதொன்றாகக் காணப்படுவதோடு கால சூழ்நிலைகளுக்கேற்ப மனித நடத்தைக் கோலங்களில் ஏற்படும் மாறுபாடுகளை அவதானம், வரலாற்று முறை, அகநோக்கு முறை ,கள ஆய்வு ,வினாக் கொத்து, பங்குபெற்றல் ,போட்டி முறை போன்ற நுட்ப முறைகளினூடாக ஆய்வு செய்யக் கூடியதொன்றாகக் காணப்படுகிறது.


குறிப்பாக சமூக விஞ்ஞானமானது அரசியல் விஞ்ஞானம் ,வரலாறு, பொருளியல் ,உளவியல், மானுடவியல் ,மனிதவள அபிவிருத்தி போன்ற பல்வேறுபட்ட துறைகளோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டதாகக் காணப்படுகிறது.


சமூக விஞ்ஞானமானது முழு சமூகத்தையும் முழுமையாக ஆய்வு செய்ய முயற்சிக்கும் பொது விஞ்ஞானமாகக் காணப்படுவதோடு ஒழுங்கமைக்கப்பட்ட ,ஒழுங்கமைக்கப்படாத சமுதாயக் கூறுகளை அலசி ஆராயக் கூடிய ஒரு துறையாகக் காணப்படுகிறது. அது தனி மனிதனில் தொடங்கி சர்வதேசம் வரைக்கும் மனிதனின் நடத்தைப் பங்குகளை தெள்ளத் தெளிவாக விளக்கக்கூடிய துறையாகவே காணப்படுகிறது.


உதாரணம்:-(அரச அறிவியல், புவியியல்)

Muhammadu Sahran

Eastern University of Sri Lanka 

EU/IS/2020/AC/447

CS10147